- Advertisement -
கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தேஜஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். பாலிவுட் மட்டுமன்றி தமிழிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அண்மையில் தமிழில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. பிவாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி பாகம் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனிடையே, இந்தியில் கங்கனா விமானப் படை அதிகாரியாக நடித்திருந்த திரைப்படம் தேஜஸ். சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த இத்திரைப்படம் கடந்த அக்போடர் மாதம் 27-ம் தேதி வெளியானது.
2016-ம் ஆண்டு இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். இந்த சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து இத்திரைப்படம் உருவானது. கடந்த 2020-ம ஆண்டே தொடங்கப்பட்ட இத்திரைப்படம் பல்வேறு காரணங்களால் தாமதம் ஆனது. படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது. இதையடுத்து, இத்திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி வௌியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
Brace yourselves for Mission Tejas, unfolding soon! 🔥#Tejas premieres on 5th of January only on #ZEE5.#TejasOnZEE5 #ZEE5India pic.twitter.com/TbDugpw73y
— ZEE5 (@ZEE5India) December 26, 2023