காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
கன்னட சினிமாவில் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியாகி இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ‘காந்தாரா’. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஓ’ என்ற சத்தம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த சத்தத்தை கேட்கும்போது ஒரு கூஸ்பம்ப்ஸ் கிடைக்கிறது. தெய்வ நம்பிக்கை என்ற ஒன்றை மையமாக வைத்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அடுத்தது தற்போது உருவாகி வரும் இதன் ப்ரீக்குவலான காந்தாரா சாப்டர் 1 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் திரைக்கு வர தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலரை பார்க்கும்போது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்திருக்கிறது. அந்த அளவிற்கு அற்புதமான காட்சிகளும், அருமையான பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ட்ரெய்லர் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மினி வசந்த், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஹோம்பாலை ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அஜீனிஸ் லோக்நாத் இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.