spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'காந்தாரா' பட நடிகர் உயிரிழப்பு.... சோகத்தில் படக்குழு!

‘காந்தாரா’ பட நடிகர் உயிரிழப்பு…. சோகத்தில் படக்குழு!

-

- Advertisement -

காந்தாரா பட நடிகர் காலமானார்.'காந்தாரா' பட நடிகர் உயிரிழப்பு.... சோகத்தில் படக்குழு!

கடந்த 2022-ல் ரிஷப் ஷெட்டியின் நடிப்பிலும் இயக்கத்திலும் காந்தாரா திரைப்படம் வெளியானது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் காந்தாரா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. 'காந்தாரா' பட நடிகர் உயிரிழப்பு.... சோகத்தில் படக்குழு!காந்தாரா சாப்டர் 1 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படமானது கிபி 31 முதல் 400 காலகட்டத்தில் நடக்கும் கதையை பின்னணியாக கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2025 அக்டோபர் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.'காந்தாரா' பட நடிகர் உயிரிழப்பு.... சோகத்தில் படக்குழு! இந்நிலையில் காந்தாரா பட நடிகர் கபில் (ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்) உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கபில் ஷூட்டிங் முடித்த பிறகு, உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் உள்ள சௌபர்ணிகா ஆற்றில் நீந்தி சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் படக்குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ