Homeசெய்திகள்சினிமாஅயோத்தி குடமுழுக்கு... காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு...

அயோத்தி குடமுழுக்கு… காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு…

-

- Advertisement -
அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி, பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாண்டல்வுட் எனும் கன்னட திரையுலகை கலக்கி வருபவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. தனது திரைப்பயணத்தை இயக்குநாரக தொடங்கிய ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். கிரிக் பார்ட்டி உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் நாயகனாக உருவெடுத்தார். தான் நடித்த முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ரிஷப். கேஜிஎஃப் வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

 

முதலில் இத்திரைப்படம் கன்னடத்தில் வெளியானது. அந்த மொழியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, காந்தாரா தமிழ் தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வௌியிடப்பட்டது. இந்தியா முழுவதும் வரவேற்பும் கிடைத்தது. இப்படத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டது. தற்போது காந்தாரா 2-ம் பாகம் உருவாகி வருகிறது. அண்மையில் இப்படத்தின் படப்பிப்பு பூஜையுடன் தொடங்கியது. அதோடு, படத்தின் முதல் தோற்றத்தையும் படக்குழு பகிர்ந்தது. இப்படத்தையும் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கிறார்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுக்க வலியுறுத்தியுள்ளார். அந்த வகையில் கன்னட திரையுலகம் சார்பாக நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

MUST READ