spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜூன் மாதத்தில் தொடங்கும் கார்த்தியின் 'சர்தார் 2' படப்பிடிப்பு!

ஜூன் மாதத்தில் தொடங்கும் கார்த்தியின் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு!

-

- Advertisement -

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.ஜூன் மாதத்தில் தொடங்கும் கார்த்தியின் 'சர்தார் 2' படப்பிடிப்பு!

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து வா வாத்தியாரே, மெய்யழகன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கார்த்தி அடுத்ததாக சர்தார் 2 படத்தில் நடிக்க உள்ளாராம். கடந்த 2022-ல் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில் கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி, பிஎஸ் மித்ரன் இயக்கும் சர்தார் 2 படத்தில் நடிக்க உள்ளார். ஜூன் மாதத்தில் தொடங்கும் கார்த்தியின் 'சர்தார் 2' படப்பிடிப்பு!இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இது தொடர்பான அப்டேட்டுகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வந்ததை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூன் 7ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் அதற்கான முழு வேலைகளும் நடைபெற்று வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ