நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் இவர் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்றமே 1ஆம் ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், சூர்யாவின் தம்பி கார்த்தி, வா வாத்தியார் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் சர்தார் 2 திரைப்படமானது சூர்யா 45 படத்துடன் மோத உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சூர்யா 45 மற்றும் சர்தார் 2 ஆகிய திரைப்படங்கள் 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தாலும் சூர்யா 45, சர்தார் 2 ஆகிய படங்கள் ஒரே நாளில் மோத வாய்ப்புள்ளதா? என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படமும் தீபாவளிக்கு வரும் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இருப்பினும் எந்தெந்த படம் எப்போது வரும்? என்பதை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.