spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் கவினின் பிறந்ததின சிறப்பு பதிவு!

நடிகர் கவினின் பிறந்ததின சிறப்பு பதிவு!

-

- Advertisement -

நடிகர் கவினின்33 வது பிறந்த நாள் இன்று.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் செய்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அதில் வெகு சிலரே உச்சம் தொடும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளனர் அந்த வரிசையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் நடிகர் கவின்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் தாயுமானவன், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார். குறிப்பாக சரவணன் மீனாட்சி தொடரில், சரவணன் என்ற வேட்டையன் கதாபாத்திரம் கவினை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அதன்பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

we-r-hiring

அதைத்தொடர்ந்து பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார்.

மேலும், விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பிரபலமானார். அதன் மூலம் இன்னும் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற லாஸ்லியாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்களும் வெளிவந்தன.

அதன் பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா, 2021 ஆம் ஆண்டு ஓ டி டி இல் வெளியான லிஃப்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.

இத்திரைப்படத்தில் எட்டு வயது சிறுவனின் தந்தையாக நடித்திருந்தார் கவின். வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கும் பொழுதே ஒரு முதிர்ந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதை மிகச் சிறப்பாக கையாண்டு இருந்தார்.
இந்த வெற்றிக்குப் பிறகு பல்வேறு பட வாய்ப்புகள் கவினுக்கு குவிந்து வருகின்றன.

இப்போதைய நடிகர்களில் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை புரிந்து நடிக்கின்ற நடிகர்களில் கவின் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறார்.

சின்னத்திரையில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெள்ளித்திரைக்கு பயணித்து அதன் மூலம் தன் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை உருவாக்கிக் கொண்டு தனக்கான பாதையை தேர்ந்தெடுத்து செல்லும் கவின் மேன்மேலும் வெற்றி பெற, ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ