Homeசெய்திகள்சினிமாரசிகரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

ரசிகரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

-

- Advertisement -
பிரபல தயாரிப்பாளர் மற்றும் மலையாள நடிகையின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். கோலிவுட், டோலிவுட், மோலிவுட் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக வலம் வரும் கீர்த்தி தற்போது பாலிவுட் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகினார். முதல் படத்திலேயே க்யூட் என ரசிகர்களை கொஞ்ச வைத்த கீர்த்தி அடுத்தடுத்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தார்.

இறுதியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கிலும் போலா சங்கர், தசரா ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீதா ஆகிய படங்களில் நடித்துள்ளார். மற்றும் ஜெயம்ரவியுடன் அவர் நடித்துள்ள சைரன் திரைப்படமும் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுதவிர தெறி இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷே இன்ஸ்டா பக்கத்தில் கிருஷ்ணா என்ற ரசிகர் ஒருவர் 234 நாட்களாக ரிப்ளை கொடுக்குமாறு பதிவிட்டு வந்துள்ளார். இதற்கு கீர்த்தியிடம் எந்த ரிப்ளையும் வரவில்லை. அண்மையில் அந்த பதிவை பார்த்த கீர்த்தி, ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு, உங்களை அதிகம் நேசிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அதனால் அந்த ரசிகர் உற்சாகத்தில் திளைத்துள்ளார்

MUST READ