Homeசெய்திகள்சினிமாசவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்... கீர்த்தி சுரேஷ் ஆசை...

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்… கீர்த்தி சுரேஷ் ஆசை…

-

மலையாளத்தில் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில், இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, என அடுத்தடுத்து கமிட்டாகி நடிக்கத் தொடங்கினார். விஜய்யுடன் பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழில் அவரது நடிப்பில் இறுதியாக சைரன் திரைப்படம் வௌியாகி வரவேற்பை பெற்றது. தற்போது கீர்த்தி சுரேஷ் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். ரகு தாத்தா, ரிவால்வர் ரீதா, கன்னிவெடி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இது மட்டுமன்றி இந்த ஆண்டு அவர் பாலிவுட்டிலும் தடம் பதிக்கிறார். தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார்.

இந்நிலையில், சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் நடிக்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் படத்தின் வெற்றிக்கு பிறகு, கூடுதல் பொறுப்போடு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன், நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ