spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கிங்ஸ்டன்' படத்திலிருந்து 'மண்ட பத்திரம்' பாடல் வெளியீடு!

‘கிங்ஸ்டன்’ படத்திலிருந்து ‘மண்ட பத்திரம்’ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

கிங்ஸ்டன் படத்திலிருந்து ‘மண்ட பத்திரம்’ பாடல் வெளியாகியுள்ளது.'கிங்ஸ்டன்' படத்திலிருந்து 'மண்ட பத்திரம்' பாடல் வெளியீடு!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஜேஷ் பாலச்சந்திரன், சேத்தன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே இந்த படமானது 2025 மார்ச் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

we-r-hiring

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மண்ட பத்திரம் எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கானா பிரான்சிஸ் எழுதி, பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ