Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகை லாவண்யா திரிபாதிக்கு கால் முறிவு... ரசிகர்கள் பிரார்த்தனை....

பிரபல நடிகை லாவண்யா திரிபாதிக்கு கால் முறிவு… ரசிகர்கள் பிரார்த்தனை….

-

- Advertisement -
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. இதைத்தொடர்ந்து, ‘மாயவன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். தமிழில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே இவர் படங்கள் நடித்திருந்தாலும், தெலுங்கில் இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

இதனிடையே, தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் ‘அந்தாரிக்‌ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் டசுக்கனி நகரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் இருவரின் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், ராம் சரண், பவண் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் வருண் தேஜூம், நடிகை லாவண்யாவும் பிசியாக நடித்து வருகின்றனர். அண்மையில் இவரது நடிப்பில் மிஸ் பர்ஃபெக்ட் என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை லாவண்யா காலில் கட்டுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு படப்பிடிப்பின்போது, காலில் எழும்பு விலகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்த பிரார்த்தனை செய்வதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ