விரைவில் சென்னை திரும்பும் லியோ படக்குழு
காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை நிறைவு செய்து, மார்ச் 20க்கு பிறகாக சென்னை திரும்புகிறது நடிகர் விஜயின் ‘லியோ’ படக்குழு
நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் இரண்டாவது முறையாக ‘லியோ‘ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.அர்ஜுன்,சஞ்சய்தத்,கௌதம் வாசுதேவ மேனன், மிஷ்கின்,மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி படத்திற்கான பூஜை போடப்பட்டு, ப்ரோமோ காட்சிகளும் படமாக்கப்பட்டன. பூஜை நடந்ததற்கான வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.
கடந்த டிசம்பர் மாதமே நடிகர் விஜய்யை வைத்து படத்திற்கான ப்ரோமோ காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அந்த காட்சிகள் மற்றும் அனிருத்தின் பின்னணி இசையோடு ‘லியோ’ என்ற படத்தின் தலைப்போடு ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு. மேலும் இத்திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் சென்னையிலும், இரண்டாம் கட்டமாக அதே மாதத்தில் கொடைக்கானலிலும் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விஜய் உள்பட படக்குழு அனைவரும் தனி விமானத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் காஷ்மீர் சென்ற நிலையில். அதற்கான வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது படக்குழு.
மேலும் இயக்குநர் மிஷ்கின்,கௌதம் வாசுதேவ் மேனன் காட்சிகள் படமாக்கப்பட்டு சமீபத்தில் அவர்கள் சென்னை திரும்பினார்கள். இந்நிலையில் மார்ச் 25 ம் தேதிக்குள் காஷ்மீர் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் மார்ச் 20க்கு பிறகாக எப்போது வேண்டுமானாலும் சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.