spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ரீ ரிலீஸ் ஆகும் 'மாநாடு'!

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ரீ ரிலீஸ் ஆகும் ‘மாநாடு’!

-

- Advertisement -

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு திரைப்படம் நாளை ரீ- ரிலீஸ் ஆகிறது.சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ரீ ரிலீஸ் ஆகும் 'மாநாடு'!

கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான படம் தான் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதாவது நடிகர் சிம்பு, மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். எஸ். ஜே. சூர்யாவும் தனது வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார்.சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ரீ ரிலீஸ் ஆகும் 'மாநாடு'! சிம்பு நடிப்பில் வெளியான பல படங்களில் மாநாடு திரைப்படமும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு திரைப்படம் நாளை (ஜனவரி 31) ரீ ரிலீஸ் ஆகிறது. ரசிகர்களும் இப்பொழுதே கொண்டாட தயாராகி விட்டார்கள்.

we-r-hiring

ஏற்கனவே சிம்புவின் பிறந்தநாளில் அவருடைய அடுத்த மூன்று படங்களின் அப்டேட் வெளிவர இருக்கிறது. அத்துடன் மன்மதன் திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ