பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், காக்க காக்க,வேட்டையாடு விளையாடு என பல வெற்றி படங்களை தந்தவர். இவர் கடைசியாக ஜோஸ்வா இமை போல் காக்க எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதே சமயம் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக மம்மூட்டியை இயக்கப் போகிறார் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. அதன்படி கௌதம் மேனன், மம்மூட்டி கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படமானது மலையாள மொழியில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை நடிகர் மம்மூட்டி தயாரிக்கப் போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. அதேசமயம் இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நயன்தாராவிற்கு பதிலாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.