திருமண வாழ்வில் இருந்து வெளியேறுவதாக மண்டேலா பட நடிகை ஷீலா ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
ஷீலா ராஜ்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ஆறாது சினம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை, பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். மடோன் அஸ்வின் மற்றும் யோகி பாபு கூட்டணியில் வெளியான மண்டேலா படத்தின் மூலம் இவரின் பெயர் பிரபலமானது. சமீபத்தில் வெளியான நூடுல்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.


ஷீலா ராஜ்குமார் தனது ஒவ்வொரு படங்களிலும் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. இதற்கிடையில் இவர் கடந்த வருடம் தம்பி சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களின் எதிர்ப்பை தாண்டி இவர்களின் திருமணம் கடலுக்கு நடுவில் நடைபெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இருந்த போதிலும் இருவருக்கும் இடையில் சில மன கசப்புகள் ஏற்பட இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்
நன்றியும் அன்பும் @ChozhanV— Sheela (@sheelaActress) December 2, 2023
இந்நிலையில்தான் ஷீலா ராஜ் குமார், தான் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


