Homeசெய்திகள்சினிமாபுயல் வேகத்தில் 100 கோடியை நெருங்கும் மஞ்சுமெல் பாய்ஸ்!

புயல் வேகத்தில் 100 கோடியை நெருங்கும் மஞ்சுமெல் பாய்ஸ்!

-

மலையாள சினிமாவில் சமீப காலமாக தொடர்ந்து பல வெற்றி படங்கள் வெளியாகி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் தமிழகத்திலும் நல்ல வசூலை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. புயல் வேகத்தில் 100 கோடியை நெருங்கும் மஞ்சுமெல் பாய்ஸ்!சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கியிருந்த இந்த படம் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் சக்கை போடு போடுகிறது. அதன்படி தமிழகத்தில் மட்டுமே 15 கோடி வசூலை தாண்டி உள்ளது. மேலும் உலக அளவில் ஏற்கனவே 50 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தப் படம் தற்போது 75 கோடிக்கு மேல் வசூல் செய்து விரைவில் 100 கோடியை எட்ட உள்ளது. இனிவரும் நாட்களிலும் இத்திரைப்படம் அதிக வசூலை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், கார்த்திக் சுப்புராஜ், தனுஷ், விக்ரம் உள்ளிட்டோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளனர்.புயல் வேகத்தில் 100 கோடியை நெருங்கும் மஞ்சுமெல் பாய்ஸ்!

பரவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுசின் சியாம் இசையமைத்திருந்தார். சைஜு ஹாலித் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, லால் ஜூனியர், பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ