Homeசெய்திகள்சினிமாமன்சூர் அலிகான் செயலால் நெகிழ்ந்த மக்கள்

மன்சூர் அலிகான் செயலால் நெகிழ்ந்த மக்கள்

-

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகி்ச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால், அவருக்கு செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. இருப்பினும் பலன் இல்லாம்ல அவர் நேற்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.

அவரது உடல் தற்போது சென்னை தீவுத்திடலில், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், கேப்டனின் உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இருக்கிறார். விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான். இப்படம் மன்சூர் அலிகானின் திரை வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு, பல படங்களில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கண்டனங்களுக்கும், சர்ச்சையிலும் மாட்டிய மன்சூர் அலிகானின் நேற்றைய செயல் அனைவரையும் நெகிழச் செய்தது.

கேப்டனின் மறைவுச் செய்தி அறிந்த மன்சூர் அலிகான் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றார். அங்கு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், சாலி கிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனத்துடன் நடந்து சென்றார். பின்னர், விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இரவு கடந்தும் அவரது உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இருக்கிறார் மன்சூ அலிகான். இன்று காலை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்ட போதும் கூடவே சென்றார். மாலை நல்லடக்கம் செய்யும்வரை அவர் கூடவே இருக்க உள்ளார்.

MUST READ