- Advertisement -
தமிழ் திரைப்படங்களில் அடையாளமாக திகழும் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது.

மறைந்த இயக்குநர் ராசு ராசு மதுவரனின் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார். இந்த படத்தில் சீமான், தருண் கோபி, சிங்கம் புலி, மயில்சாமி, மணிவண்ணன், பொன்வண்ணன், ரவிமரியா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.


குடும்பக் கதையையும், பங்காளிச் சண்டையையும் மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டிய இந்த படம் 2009-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான தமிழக அரசின் விருதில் இரண்டாவது பரிசையும் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. கதை திரைக்கதை வசனம் எழுதி கே பி ஜெகன் இப்படத்தை இயக்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர், நடிகைகள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.



