பிரபல நடிகை மேகா ஆகாஷின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நடிகை மேகா ஆகாஷ். அதை தொடர்ந்து இவர் தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கும் நிலையில் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேகா ஆகாஷுக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் இளைய மகன் சாய் விஷ்ணுவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுத்து வந்தார் மேகா ஆகாஷ். இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 14) இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப் பிரபலங்களும், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு ஜோடியை வாழ்த்தி சென்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 15) காலையில் இருவரின் திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.