அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகை அனுஷ்கா ஷெட்டி நிசப்தம் படத்தை அடுத்து சினிமாவில் சில காலம் தென்படாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் புதிய படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் அனுஷ்கா தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பொலிஷெட்டியும் நடித்துள்ளார். இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். இயக்குனர் மகேஷ் பாபு இயக்கியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மற்றும் ரதன் இசையமைத்துள்ளார்.இப்படம் காதல் காமெடி கதை களத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அனுஷ்கா சமையல் கலைஞராக நடித்துள்ளார்.
கடந்த மே மாதம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.படத்தின் டீசர் மற்றும் முதல் 3 பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது.இந்நிலையில் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருப்பதாகத் தற்போது கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.