Homeசெய்திகள்சினிமாதனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்புராஜ்... இந்த தீபாவளி சும்மா களைகட்டும்!

தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்புராஜ்… இந்த தீபாவளி சும்மா களைகட்டும்!

-

- Advertisement -

இந்த வருஷ தீபாவளிக்கு சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு. ஏன் தெரியுமா நாலு சூப்பர் படங்கள் வெளியாக இருக்கின்றனவாம்.

ஒவ்வொரு வருடமும் தீபாவளியின் போது இனிப்பு மற்றும் பட்டாசுகளுடன் ப புது படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களது பண்டிகையை கொண்டாடி வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கு 4 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதில் இரண்டு படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியினை உறுதி செய்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிகர்தண்டா முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து இரண்டாம் பாகத்திற்கு  பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள பேண்டஸி திரைப்படமான ”அயலான்” தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலியனை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.  நீண்ட காலம் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் ட்ரீட் வைப்பதற்காக தீபாவளிக்கு வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக ராஜுமுருகன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் மற்றும் ஜப்பான் திரைப்படங்கள் இன்னும் தங்களது ரிலீஸ்தேதியை உறுதி செய்யவில்லை. ஆனால் தீபாவளிக்கு ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ