- Advertisement -
மெலோடியாக இருந்தாலும் சரி, குத்தாக இருந்தாலும் சரி இன்னிசை வழங்குவதில் இமானுக்கு நிகர் இமான் மட்டும் தான். தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் இசை அமைப்பாளர் டி.இமான். தில்ருபா படத்திற்கு முதல் முறையாக டி.இமான் இசை அமைத்தார். இதைத் தொடர்ந்து ரிக்ஷயா, தமிழன், விசில் ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்தார். அதில் விசில் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன. அழகிய அசுரா பாடல் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இப்பாடல் தான் டி.இமான் என்ற முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

இதையடுத்து அவர் கிரி, ஆணை, சின்னா, தக திமி தா, வாத்தியார், குஸ்தி, திருவிளையாடல் ஆரம்பம் மைனா, மாசிலா மணி, கச்சேரி ஆரம்பம் படங்களுக்கு இசை அமைத்தார். இதில், மாசிலா மணி, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் இடம்பெற்ற குத்து பாடல்கள் அடித்து தூள் கிளப்பின. ஓடி ஓடி விளையாட உள்ளிட்ட பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இதுவரை சுமார் 125 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள டி.இமான் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பாக சின்னத்திரையில் நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்துக் கொடுத்தார்.




