யோகி பாபு நடிப்பில் இன்று ஆகஸ்ட் 2 வெளியாகும் திரைப்படம் தான் போட். இந்த படத்தை இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்பு தேவன் இயக்கியுளார். மாலி அண்ட் மான்வி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்வைவல் காமெடி திரில்லர் கதை களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. படம் முழுவதும் கடலில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் படமானது தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிம்பு தேவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அன்புள்ள திரை ரசிகர்களுக்கு வணக்கம். எங்களுடைய போட் திரைப்படம் உங்கள் தமிழ் திரை அனுபவத்தில் முக்கியமான முயற்சியாக இருக்கும். இந்த படத்தை முழுக்க முழுக்க நாங்கள் கடலிலேயே எடுத்திருக்கிறோம். மிகவும் கடினப்பட்டு உருவாக்கியுள்ளோம். எப்போதும் புது முயற்சிகளை பாராட்டும் நீங்கள் எங்களையும் ஆதரிப்பீர்கள் என நம்புகிறோம். எங்களுக்கு கடலில் கிடைத்த புது அனுபவம் நிச்சயம் உங்களுக்கு திரையரங்குகளில் கிடைக்கும்.
வரலாற்றுப் பின்னணியோடு சொல்லப்பட்டு இருக்கும் இந்த கதையில் நீங்களும் ஒரு பயணியாகி இந்த படகில் பயணிப்பீர்கள். படத்தின் இறுதியில் இன்று வரை நாம் நம் ஊரில் எதிர்கொள்ளும் தீராத பிரச்சனை ஒன்று உங்களிடம் கேள்வி கேட்கும். இது போன்ற ஹாலிவுட் கடல் படங்களுக்கு கிடைக்கும் பட்ஜெட் இங்கு நமக்கு கிடைப்பது கிடையாது. இருந்தாலும் இதை நாங்கள் தரம் குறையாமல் உருவாக்கி இருக்கிறோம். அதுவே நம் தமிழ் திரையுலகின் இயல்பு. ஏற்கனவே பத்திரிக்கை மற்றும் ஊடக காட்சியிலும் பலரும் பாராட்டியிருக்கிறார்கள். நீங்களும் அவசியம் போல் படத்தை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் சிம்பு தேவன்.
- Advertisement -