spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன் மகன் இறந்துவிட்டான்.... நடிகை திரிஷாவின் கண்கலங்க வைக்கும் பதிவு!

என் மகன் இறந்துவிட்டான்…. நடிகை திரிஷாவின் கண்கலங்க வைக்கும் பதிவு!

-

- Advertisement -

நடிகை திரிஷா கண் கலங்க வைக்கும் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.என் மகன் இறந்துவிட்டான்.... நடிகை திரிஷாவின் கண்கலங்க வைக்கும் பதிவு!

நடிகை திரிஷா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஐடெண்டிட்டி, விஷ்வம்பரா ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். திரிஷா நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன. அதேசமயம் தற்போது சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திரிஷா. என் மகன் இறந்துவிட்டான்.... நடிகை திரிஷாவின் கண் கலங்க வைக்கும் பதிவு!இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் திரிஷா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவருக்கு செல்லப்பிராணிகள் (நாய்கள்) என்றால் மிகவும் விருப்பம். அதன்படி இவர் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு செல்லப்பிராணிக்கு ஜாரோ என்று பெயர் வைத்திருந்தார். ஜாரோவுடன் இருப்பது போன்ற சில புகைப்படங்களையும் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த ஜாரோ என்ற செல்லப்பிராணி இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் உயிரிழந்துள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில், “என் மகன் ஜாரோ, இன்று கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் இறந்துவிட்டான். இனிமேல் என் வாழ்க்கை ஒரு துளி அர்த்தமும் இல்லாதது என்று என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் எனக்கு நெருக்கமானவர்களுக்கு நன்கு தெரியும். நானும் என் குடும்பத்தினரும் உடைந்துவிட்டோம். இதனால் சிறிது காலம் பணியில் இருந்து விடுப்பு எடுத்து, ரேடாரில் இருந்து விலகி இருப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஜாரோவின் புகைப்படங்களையும் பகிர்ந்து அதை அடக்கம் செய்த இடத்தில் மாலை அணிவித்து அதை சுற்றி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். திரிஷாவின் இந்த பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

MUST READ