spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிஸ்கின் - விஜய் சேதுபதியின் 'ட்ரெயின்'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!

மிஸ்கின் – விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’…. ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

மிஸ்கின் – விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.மிஸ்கின் - விஜய் சேதுபதியின் 'ட்ரெயின்'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!

இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அடுத்தது இவர், ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதேசமயம் விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெயின் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படமானது கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் படமானது நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.மிஸ்கின் - விஜய் சேதுபதியின் 'ட்ரெயின்'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!இந்நிலையில் இந்த படத்தை 2025 டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அனேகமாக அப்பொழுதான் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மிஸ்கின் - விஜய் சேதுபதியின் 'ட்ரெயின்'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள ‘ட்ரெயின்’ படத்திற்கு மிஸ்கின் இசையமைத்துள்ளார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இதில் டிம்பிள் ஹயோதி, வினய் ராய், சம்பத்ராஜ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ட்ரெயினில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ