Homeசெய்திகள்சினிமாதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் - 1000க்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்பு..

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் – 1000க்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்பு..

-

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில், முன்னதாக அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்த மாரிமுத்து உள்பட கடந்த ஓராண்டில் மறைந்த நடிகர்கள் டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா, சரத்பாபு, ஆர்.எஸ்.சிவாஜி, நடிகை சிந்து உள்ளிட்ட 64 திரைக்கலைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Nadigar Sangam

இதனைத்தொடர்ந்து 2022 – 23ம் ஆண்டிக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் துணைத்தலைவர் கருணாஸ் பங்கேற்காததால் அவருக்கு பதிலாக நடிகை லதா இதனை சமர்பித்தார். பின்னர் நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் கட்டி முடிப்பது உள்பட எதிர்கால பொருளாதார திட்டமிடல், எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தியும், பொதுச்செயலாளர் விஷாலும் உரையாற்றினர். இந்த பொதுக்குழுவில் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஸ்ரீமன், சரவணன், நந்தா, ரமணா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், நாடக கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக காலை 9 மணிக்கு நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 23 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தில் சங்க வளர்ச்சி பணிகள், கட்டிடப்பணிகளை விரைவாக முடிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மேலும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நலிவுற்ற திரைக்கலைஞர்களுக்கான ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளாஇ உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றனர்.

 

MUST READ