Homeசெய்திகள்சினிமாயாரோ ஒருத்தங்க பேசும் போது தான் கஷ்டமா இருக்கு... சமந்தா பற்றி பேசிய நாக சைதன்யா!

யாரோ ஒருத்தங்க பேசும் போது தான் கஷ்டமா இருக்கு… சமந்தா பற்றி பேசிய நாக சைதன்யா!

-

- Advertisement -

நடிகர் நாகசைதன்யா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைதன்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடித்துள்ளார். சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

we-r-hiring

‘இசைஞானி’ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்தப் படம் மே மாதம் 12-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக நாகசைதன்யா தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் தனது விவாகரத்து குறித்து நாகசைதன்யா பேசியுள்ளார்.

“சமந்தா உடனான திருமண வாழ்க்கையின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. அக்டொபர் 2021 இல் அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்ததாகவும், அவர்கள் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று ஒரு வருடம் ஆகிறது என்றும் தெரிவிக்கிறது.

எங்கள் விவகாரத்தைப் பற்றி மூன்றாவது மனிதர்கள் பேசும் போது தான் கஷ்டமாக இருக்கிறது. சமந்தாவைப் பற்றி சொல்ல என்னிடம் அத்தனை நல்ல விஷயங்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களைச் சுற்றி உருவாகும் வதந்திகள் தான் அவர் வாழ்க்கையை மோசமாக்கிவிடுகின்றன.

சமந்தா ஒரு அழகான மனிதர் என்றும் எல்லா மகிழ்ச்சிக்கும் தகுதியானவர். ‘ஊடகங்கள் தாமாக சில செய்திகள் வெளியிடும் போது தான் எங்களுக்கிடையில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மக்கள் பார்வையில் பரஸ்பர மரியாதை பறிக்கப்படுகிறது. அதைத்தான் நான் மோசமாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமந்தாவிடமிருந்து விவாகரத்துக்குப் பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

MUST READ