spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமகனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்... மருத்துவமனை கட்டிக்கொடுத்த நடிகர் நெப்போலியன்...

மகனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்… மருத்துவமனை கட்டிக்கொடுத்த நடிகர் நெப்போலியன்…

-

- Advertisement -
மகனின் உயிரைக் காப்பாற்றிய நடிகருக்கு, பிரபல நடிகர் நெப்போலியன் மருத்துவமனை கட்டி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் நாயகனாக நடித்ததை விட வில்லனாக நடித்த திரைப்படங்களே அதிகம். நெப்போலியன் நடித்ததில் கிழக்குச் சீமையிலே, எட்டுப்பட்டி ராசா ஆகிய திரைப்படங்கள் மிகவும் பிரபலம். இத்திரைப்படங்களில் நெப்போலியனின் மிரட்டலான நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. நெப்போலியன் நடனமாடிய பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடல் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகும். இதுதவிர ரஜினி உள்பட முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக வில்லனாகவும் நடித்துள்ளார்.

we-r-hiring
நடிகர் நெப்போலியன் அரசியலில் குதித்து அமைச்சர் பதவி வகித்தார். நடிப்பு, அரசியலில் வெற்றி பெற்ற நெப்போலியன் அமெரிக்காவில் வீடு கட்டி அங்கேயே வசித்து வருகிறார். அண்மையில் பிரபல யூடியூப் நட்சத்திரம் இர்ஃபானுடன் எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ் என்ற மகன் உள்ளார். இவர் தசைச்சிதைவு என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுவயது முதலே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 17 வயதில் உயிருக்கே போராடும் சூழல் ஏற்பட்டது.

பல மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றமுடியாது என்று கைவிரித்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கிராமத்தில் பரம்பரையாக நாட்டு வைத்தியம் செய்து வந்த ஒருவர் தான் நெப்போலியன் மகனுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அந்த ஊரிலேயே தங்கி மகனுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நாட்டு வைத்தியம் மூலம் நடக்கத் தொடங்கிய மகனின் செய்தி வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தது. இதைத் தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த நெப்போலியன் இது போல அவதிப்படும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை கிடைக்க ஏதுவாக, நாட்டு வைத்தியருக்கு நவீன வசதிகளுடன் மருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ளார். 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் திறந்து வைத்துள்ளாராம். தற்போது மருத்துவமனையை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.

MUST READ