- Advertisement -
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா. ஐயா படத்தில் தொடங்கிய இவரது பயணம் இன்று வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அன்று முதல் இன்று வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நயன்தார். தமிழில் விஜய், ரஜினி, சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், அஜித், சிவகார்த்திகேயன், விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் டாப் நடிகையாக வலம் வருகிறார்.

அண்மைக் காலங்களில் மலையாளத்திலும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, கடந்த ஆண்டு பாலிவுட்டுக்கும் சென்றார். ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து பாராட்டு பெற்றார். இதனிடையே நடிகை நயன்தாராவும், அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனும் அவ்வப்போது பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் இருவருக்கும் பிரச்சனை, இருவரும் விவாகரத்து பெற உள்ளனர் என்று வதந்திகள் பரவின.




