கடந்த 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது. அந்த வகையில் சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், பிகில் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகிய மூவரும் ஆவர்.
தற்போது இந்நிறுவனம் தனது 24 வது படத்தை தயாரித்து வருகிறது. கான்ஜூரிங் கண்ணப்பன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சதீஷ் நாயகனாக நடித்து வருகிறார். நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில், இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. விஷ்ணு எடவன் இந்த பாடலை எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மற்றும் மதிச்சியம் பாலா இந்த பாடலை பாடியுள்ளனர்.