சிவகார்த்திகேயன்- ரவி மோகன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரவி மோகன் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது ஜீனி, கராத்தே பாபு ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் 12 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். அதன்படி மதராஸி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் ரவி மோகன், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து பராசக்தி எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே மதுரை, சிதம்பரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் – ரவிமோகன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.