spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசின்னத்திரைக்கு வரும் பார்த்திபன்?

சின்னத்திரைக்கு வரும் பார்த்திபன்?

-

- Advertisement -

நடிகர் பார்த்திபன் சின்னத்திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சின்னத்திரைக்கு வரும் பார்த்திபன்?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான சிந்தனை, புதுமையான முயற்சி என்றாலே நம் நினைவுக்கு வருவது பார்த்திபன் தான். அந்த அளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை கையாளக்கூடியவர். இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் வழக்கமான பாதையை விட்டு விலகி புதிய யோசனைகளை கொண்டு வந்தவர். இவர் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இட்லி கடை படத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பார்த்திபன், தொலைக்காட்சி தொடர் ஒன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ‘பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்’ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக பார்த்திபன், “பொதுவாக கொலை போன்ற குற்றங்களை செய்ய உறுதுணையாக இருப்பவர்களுக்கு அதிக தண்டனை கிடைக்கும். நல்லது செய்ய தூண்டுபவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும். அதே மாதிரி அதிக புண்ணியம் எனக்கும் கிடைக்கும் என்பதால் நான் இதற்கு ஒப்புக்கொண்டேன். சின்னத்திரைக்கு வரும் பார்த்திபன்?அப்துல் கலாம் ஐயாவுக்கும் எனக்கும் இடையில் நிறைய உணர்வுபூர்வமான அன்பு இருக்கிறது. அந்த வகையில் விவேக்கை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். ஒருவேளை விவேக் உயிருடன் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை அவரை தான் தொகுத்து வழங்க சொல்லியிருப்பேன். எனக்கு வாய்ப்பளித்த ஏ டு இஸட் லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட், காமன் ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி. சினிமாவே ஒரு பெரிய அறிவியல் அதிசயம் தான். அதில் சாதிக்க நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அறிவியல் பற்றி பெரிதாக தெரியாது. ஆனால் இந்த அறிவியல் உலகில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ