- Advertisement -
தான் இறந்து விட்டதாக போலியான செய்தி பரப்பியதற்காக, நடிகை பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டு, மேலும், 100 கோடி ரூபாய் அபதாதம் கேட்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அவர் மாடல் அழகியும் கூட. இவர் கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் என தெரிவித்ததன் மூலம் பெரும் சர்ச்சைக்கு ஆளாகி பிரபலமும் அடைந்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சர்ச்சை கருத்தைகளும், செயல்களையும் செய்து வந்தார். பாலிவுட்டில் நஷா என்ற படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமானார்.


இதைத் தொடர்ந்து, அவர் தனக்கென தனியாக இணையதளம் தொடங்கினார். இதில், அவர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர், கர்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக, அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.



