spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'டிடி ரிட்டன்ஸ் -பார்ட் 2' படத்தை தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகர்!

‘டிடி ரிட்டன்ஸ் -பார்ட் 2’ படத்தை தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகர்!

-

- Advertisement -

'டிடி ரிட்டன்ஸ் -பார்ட் 2' படத்தை தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகர்!சந்தானம் நடித்து மாபெரும் ஹிட்டடித்த நகைச்சுவைத் திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். ஹாரர் காமெடி படமாக வெளியான இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார். ரெடின் கிங்ஸ்லி, சுரபி,  மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். சந்தானம் நடிப்பில் ஏற்கனவே வெளியான தில்லுக்கு துட்டு பட வரிசையில் தான் இப்படத்திற்கு டிடி ரிட்டன்ஸ் என பெயரிடப்பட்டது. இந்நிலையில் டிடி ரிட்டன்ஸ் படத்தின் பார்ட் 2 தயாராகவுள்ளது. இப்படத்தை பிரபல நடிகரும் சந்தானத்தின் நெருங்கிய நண்பருமான ஆர்யா தயாரிக்கிறார். தி ஷோ பீப்பிள் (the show people) எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்யா அமர காவியம், ரெண்டகம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கேப்டன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தின் பார்ட் 2வையும் தயாரிக்க உள்ளார் ஆர்யா. டிடி ரிட்டன்ஸ் பார்ட் 2 படமும் முந்தைய படத்தின் தொடர்ச்சியாக உருவாக உள்ளதா அல்லது முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்குமா என்பது பற்றி தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் படத்தில் பணியாற்றும் பிற நடிகர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.'டிடி ரிட்டன்ஸ் -பார்ட் 2' படத்தை தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகர்!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஆர்யா, டிடி ரிட்டன்ஸ் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி வெளியாக இருக்கிறது.

MUST READ