spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜனநாயகன்' படத்துடன் மோதும் பிரபாஸின் புதிய படம்!

‘ஜனநாயகன்’ படத்துடன் மோதும் பிரபாஸின் புதிய படம்!

-

- Advertisement -

பிரபாஸின் புதிய படம் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.'ஜனநாயகன்' படத்துடன் மோதும் பிரபாஸின் புதிய படம்!

தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 1’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவருடைய நடிப்பில் கடைசியாக ‘கல்கி 2898AD’ திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’, ‘கல்கி 2898AD – 2’ போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், இயக்குனர் மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சமுத்திரகனி, யோகி பாபு, ரித்தி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனமும், ஐவிஒய் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. தமன் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், கார்த்திக் பழனி இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். 'ஜனநாயகன்' படத்துடன் மோதும் பிரபாஸின் புதிய படம்!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் 2025 டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பாக படக்குழு தரப்பில் புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

மேலும் 2026 ஜனவரி 9 அன்று விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ