Homeசெய்திகள்சினிமாஅப்போ தேவா.... இப்போ பைரவா.... கலக்கும் பிரபாஸ்..... 'கல்கி' பட புதிய போஸ்டர் வெளியீடு!

அப்போ தேவா…. இப்போ பைரவா…. கலக்கும் பிரபாஸ்….. ‘கல்கி’ பட புதிய போஸ்டர் வெளியீடு!

-

நடிகர் பிரபாஸ் கடைசியாக சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து பிரபாஸ், கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அப்போ தேவா.... இப்போ பைரவா.... கலக்கும் பிரபாஸ்..... கல்கி பட புதிய போஸ்டர் வெளியீடு!இதில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். இதன் காரணமாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகமாகியுள்ளது. மேலும் இந்த படம் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் நிலையில் ஏற்கனவே படத்தின் முன்னோட்ட வீடியோவை பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். அப்போ தேவா.... இப்போ பைரவா.... கலக்கும் பிரபாஸ்..... கல்கி பட புதிய போஸ்டர் வெளியீடு!அதைத் தொடர்ந்து இந்த படம் 2024 மே 9ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெளியான இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ