Homeசெய்திகள்சினிமா2028ல் 'புஷ்பா 3' வரும்.... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

2028ல் ‘புஷ்பா 3’ வரும்…. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

புஷ்பா 3 படம் குறித்து தயாரிப்பாளர் ரவிசங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.2028ல் 'புஷ்பா 3' வரும்.... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா- தி ரைஸ் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் புஷ்பா 2 – தி ரூல் திரைப்படமும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்த படம் வெளியான 6 நாட்களில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திய இப்படம் ரூ. 1800 கோடியை தாண்டி உள்ளது.2028ல் 'புஷ்பா 3' வரும்.... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்! இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதே சமயம் த்ரிவிக்ரமுடன் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளார் அல்லு அர்ஜுன். இது தொடர்பான பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் புஷ்பா 1, புஷ்பா 2 ஆகிய படங்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்த ரவிசங்கர் புஷ்பா 3 படம் குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார்.

அதன்படி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரவிசங்கர், “அல்லு அர்ஜுனுக்கு அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்கள் இருக்கிறது. இதன்படி அவர் அட்லீ மற்றும் த்ரிவிக்ரம் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் சுகுமாரும், ராம்சரணின் புதிய படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஆகையினால் புஷ்பா 3 படத்தினை 2028ல் எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சமீப காலமாக புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்திற்கு புஷ்பா 3 – தி ரேம்பேஜ் என்று தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே படக்குழு அறிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ