மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் இருவரும் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பகத் பாசில், நடிகர் வடிவேலு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்ட அளவில் நடத்த உதயநிதி திட்டமிட்டு இருக்கிறாராம். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் கலந்து கொண்டு அந்த விழாவை மேலும் பிரம்மாண்டமாக்கினர். அதுபோல மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் இருவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.