- Advertisement -
அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் சிறிய மகன் ஆனந்த் அம்பானிக்கும், அவரது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்று முடந்தது. திருமண நிச்சயமே வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஜாம் நகரமே, மூன்று நாட்களாக கொண்டாட்டமும், கோலாகலமுமாக இருந்தது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் என ஏராளமான முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.


இதுமட்டுமன்றி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு, சர்வதேச விமானங்களை தரையிறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அம்பானியின் சொந்த செலவில், பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பை மற்றும் டெல்லி நகரத்திலிருந்து குஜராத் அழைத்து வரப்பட்டனர். இந்த விழாவில் கோலிவுட் பக்கத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பிரபல இயக்குநர் அட்லீ மற்றும்அவரது மனைவி பிரியா அட்லீயும் கலந்து கொண்டனர்.



