அர்ஜூன் தாஸின் ரசவாதி… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…
- Advertisement -
அர்ஜூன் தாஸ் நடிப்பில் இறுதியாக வௌியான ரசவாதி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் அர்ஜூன் தாஸ். அவரது கர்ஜிக்கும் குரலுக்கு தமிழகத்தில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். கைதி படத்தில் வில்லனாக நடித்த அவர், தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து, அந்தகாரம் படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.
மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் கவனம் பெற்றவர் இயக்குநர் சாந்தகுமார். இவர் இயக்கிய மூன்றாவது திரைப்படமான ரசவாதி திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்திருந்தார். தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்தார். டிஎம்ஏ மெக்கானிக் கம்பெனி இத்திரைப்படத்தை தயாரித்தது. இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்ரம்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்
இத்திரைப்படம் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரசவாதி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 21-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் படம் வௌியாகிறது.