Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' .... ரிலீஸ் எப்போது?

ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ …. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' .... ரிலீஸ் எப்போது?

ஆர்.ஜே. பாலாஜி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
அதே சமயம் இவர் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தையும் இயக்கி வெற்றிகண்டார். இதைத்தொடர்ந்து இவர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இவர், சொர்க்கவாசல் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை சித்தார்த் விஸ்வநாத் எழுதி இயக்க ஸ்வைப் ரைட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. கிறிஸ்டோ சேவியர் இந்த படத்திற்கு இசையமைக்க பிரின்ஸ் ஆண்டர்சன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' .... ரிலீஸ் எப்போது?இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து கருணாஸ், நட்டி நட்ராஜ், செல்வராகவன், சானியா ஐயப்பன் போன்ற பலரும் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ