நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.
நடிகர் சந்தானம் நடிப்பில் இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ள திரைப்படம் தான் இங்க நான் தான் கிங்கு. இந்த படத்தின் சந்தானத்துடன் இணைத்து தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஸ்காந்த், ப்ரியாலயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை கோபுரம் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் தயாரித்துள்ளார். டி இமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த மே 17ஆம் தேதி வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த படமானது முதல் நாளில் உலகம் முழுவதும் 1.5 வரை வசூல் செய்தது. இரண்டாவது நாள் 1.4 கோடி வசூல் செய்வது. மூன்றாவது நாள் 1.7 கோடி வசூல் செய்தது. மொத்தமாக இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 3 இல் வெளியான அரண்மனை 4 படமும் மே 10 இல் வெளியான ஸ்டார் படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருவதால் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படமானது அதிக வசூலை அள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.