Homeசெய்திகள்சினிமாவிடுதலை படத்தில் வாத்தியார் வேடம் என்னை தேடி வந்தது - விஜய் சேதுபதி

விடுதலை படத்தில் வாத்தியார் வேடம் என்னை தேடி வந்தது – விஜய் சேதுபதி

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவை மாறுபட்ட பாதையில் அழைத்துச் சென்றவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் விடுதலை முதல் பாகம். நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

 

மேலும், விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இதுவரை முடிவடையாமல் இன்று வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விடுதலை படத்தில் இடம்பெற்ற வாத்தியார் கதாபாத்திரத்திற்கு முதலில் சீமானை தான் வெற்றிமாறன் அனுகியதாக சீமானே தெரிவித்துள்ளார். பிறகு அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்காததால் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்றும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

MUST READ