Homeசெய்திகள்சினிமாகுடும்பத்தினருடன் சிரஞ்சீவியை சந்தித்த நடிகை ஷாலினி அஜித்குமார்

குடும்பத்தினருடன் சிரஞ்சீவியை சந்தித்த நடிகை ஷாலினி அஜித்குமார்

-

- Advertisement -
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம் படத்தில் ஷாலினியும், அஜித்குமாரும் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே காதலித்தனர். பின்னர், இரு வீட்டு சம்மதத்துடன் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி சினிமாவில் இருந்து ஒதுங்கினார். குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஷாலினி, பெரும்பாலான நேரத்தை மகள் மற்றும் மகனுடன் செலவளித்து வருகிறார்.

அண்மைக் காலமாக தான் நடிகை ஷாலினி தனது மகள் அனோஷ்காவுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திரை பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்வுகளிலிலும் அவர் கலந்து கொள்கிறார். மேலும், மகன் ஆத்விக்கின் கால்பந்து விளையாட்டையும் ஷாலினி ஊக்கப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஷாலினி அஜித்குமார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவியை தனது சகோதரி, சகோதருடன் சந்தித்து உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிரஞ்சீவி தற்போது விஷ்வாம்பரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

MUST READ