நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ஏராளமான ரசிகைகள் இருக்கிறார்கள். ஏனென்றால் திரைத்துறையில் சாக்லேட் பாயாக வலம் வரும் சில நடிகர்களின் நடிகர் சித்தார்த்தும் ஒருவர். இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் சித்தார்த்தை முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் காட்டியது.
அடுத்ததாக இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக நடிகர் சித்தார்த் மிஸ் யூ போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதற்கிடையில் தான் இவர் கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவ் – ஐ காதலித்து வந்தார். அதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பாக தான் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இருவருமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தான் இருவரின் திருமணம் தென்னிந்திய முறைப்படி கோவிலில் வைத்து மிகவும் எளிமையாக நடந்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்களை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -