Homeசெய்திகள்சினிமா'பராசக்தி' டைட்டிலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்..... விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி?

‘பராசக்தி’ டைட்டிலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்….. விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி?

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தனது 25வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. 'பராசக்தி' டைட்டிலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்..... விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி?இது தொடர்பான டைட்டில் டீசர் நேற்று (ஜனவரி 29) இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. அதே சமயம் நேற்று காலை 11 மணி அளவில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு ஒரே தலைப்பில் இரண்டு படங்களின் அறிவிப்பு வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.'பராசக்தி' டைட்டிலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்..... விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி?

அடுத்தது இது தொடர்பாக விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதமே தென்னிந்திய பிலிம் சேம்பரில் தன்னுடைய சக்தித் திருமகன் படத்திற்கு பராசக்தி தெலுங்கு டைட்டில் உரிமையை பதிவு செய்த ஆதாரத்தை வெளியிட்டார். அதே சமயம் கடந்த 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம், பராசக்தி என்ற டைட்டில் சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும் அதற்காக அவர்கள் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறையான அனுமதி பெற்று விட்டதாகவும் ஆதாரத்தை வெளியிட்டிருந்தனர்.'பராசக்தி' டைட்டிலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்..... விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி?

எனவே இருதரப்பினருக்கும் பராசக்தி என்ற டைட்டில் தொடர்பான மோதல் ஏற்பட்டதனால் பராசக்தி என்ற டைட்டில் யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. இந்நிலையில் தான் விஜய் ஆண்டனி, அருண் பிரபு (சக்தி திருமகன் பட இயக்குனர்), ஆகாஷ் பாஸ்கரன் (டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்) ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். இதன் மூலம் பராசக்தி டைட்டில் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பராசக்தி என்ற டைட்டில் சிவகார்த்திகேயன் கைப்பற்றி விட்டதாகவும் விஜய் ஆண்டனி இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுத்து அவருடைய சக்தித் திருமகனின் தெலுங்கு பதிப்பிற்கு வேறு பெயர் வைப்பார் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ