தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு மனிதர் விஜயகாந்த். தன்னலம் கருதாத பொதுநலவாதியாக வாழ்ந்தவர். சினிமா மற்றும் அரசியலை தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இத்தகைய பெருமைகளை உடைய விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி அவர் உடல் நல குறைவால் காலமானார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு தமிழ் மக்களையும் தனிப்பட்ட முறையில் அவருடைய மரணம் பாதித்திருக்கிறது. அத்தகைய மாமனிதனுக்கு இந்த பொங்கல் தினத்தில் அவருடைய நினைவைப் போற்றி பெருமைப்படுத்தும் விதமாக ஒரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பப்பட உள்ளது.
Captain..🫡🖤
Salute To Captain | Pongal special | Jan 15 | Monday | 10.00 AM#SaluteToCaptain #Vijayakanth #SpecialProgram #ZeeTamilPromo #Promo #ZeeTamil pic.twitter.com/5i98tox4JF
— Zee Tamil (@ZeeTamil) January 11, 2024
“சல்யூட் டு கேப்டன்” எனும் இந்நிகழ்ச்சி பொங்கல் தினத்தில் (ஜனவரி 15) இன்று காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை ஒளிபரப்பப்பட உள்ளது. நடிகர் விஜயகாந்துடனான தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள பல்வேறு பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். விஜயகாந்தின் இரு மகன்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். ஒரு நல்ல மனிதரின் நினைவைப் போற்றும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.


