- Advertisement -
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் முதலும், முன்னணியுமான பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் தமிழ் மொழி மட்டுமன்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான பாடல்கள் பாடி இருக்கிறார். அதுமட்டுமன்றி இந்தி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட இந்திய மொழிகளிலும கிட்டத்தட்ட 18 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். சிங்கள திரைப்படங்களுக்கும அவர் பாடல்கள் பாடி இருக்கிறார். அவருடைய தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் சரளமாக பேசுவார்.



