spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரீ ரிலீஸ் பட வரிசையில் இணைந்த ஆர்.ஆர்.ஆர்.... மே-10 திரையரங்குகளில் ரிலீஸ்...

ரீ ரிலீஸ் பட வரிசையில் இணைந்த ஆர்.ஆர்.ஆர்…. மே-10 திரையரங்குகளில் ரிலீஸ்…

-

- Advertisement -
சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டி இந்திய திரையுலகில் மெகா ஹிட் கொடுத்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் நாளை மறுநாள் மே10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவானது இத்திரைப்படம். படத்தில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நாயகர்களாக நடித்திருந்தனர். மேலும், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார்.

we-r-hiring
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்ததோடு, ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதும் வென்று உலக சாதனை படைத்தது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டிக்குவித்தது. இத்திரைப்படம் தெலுங்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.ஹிட் படங்கள் தற்போது அடுத்தடுத்து மறுவெளியீடு செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் ஆர்.ஆர்.ஆர். படமும் திரைக்கு வருகிறது. மேலும், ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலின் தொழில்நுட்ப தரம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ