Homeசெய்திகள்சினிமாவிஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை.... 'தளபதி 68' அப்டேட்!

விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!

-

- Advertisement -

https://www.apcnewstamil.com/news/cinema-news/simbus-str48-movie-shooting-update/57689விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சென்னை 600028 , சரோஜா, மங்காத்தா போன்ற படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.தளபதி 68 படத்தில் இணையும் சுந்தர் சி பட நடிகை!

தளபதி 68 படத்தில் ஏற்கனவே விஜய் உடன் இணைந்து பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதன்படி சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி என பலரும் நடிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகா ஷர்மா தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளாராம். இதுகுறித்து ஏற்கனவே மாளவிகா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் தளபதி 68-ல் வாய்ப்பு தந்ததற்காக வெங்கட் பிரபுவிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

அதாவது சில தினங்களுக்கு முன்பாக தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக இவானா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இவானா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு மாளவிகா ஷர்மா நடிக்க வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ